1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. கடத்தி சென்ற 2 பேர் கைது!

 
போடிநாயக்கனூர் ரேஷன் அரிசி
 


தூத்துக்குடி மாவட்டத்தில் சரக்கு வாகனம் ஒன்றில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதாக டிரைவர் உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஈசிஆர் சாலையில் வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். 

அந்த வாகனத்தில் சட்ட விரோதமாக 1½ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வாகனத்தின் டிரைவர் நிர்மல்ராஜ் (31),  லோடுமேன் ஜெயராம் (31) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?