1500 ஆசிரியர்கள் நேரடி நியமனம்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி... !

 
ஆசிரியர்கள்

தமிழகத்தில்  அரசு தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்  நிரப்பப்படாமல் காலியாக இருந்து வருகிறது.  அதே நேரத்தில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் பட்டியல்  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில்  ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை  பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து   ஆசிரியர் தேர்வு வாரியம்  போட்டித் தேர்வினை நடத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.  

பள்ளிக்கல்வித்துறை தேர்வு

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து தற்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்  அரசாணை வெளியிட்டுள்ளார்.அந்த அரசாணையின்படி  “அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன், கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நேரடி நியமனம்  செய்து கொள்ளலாம்.அதற்கான  அனுமதி தற்போது வழங்கப்படுகிறது. அதன்படி தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்   1,000 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிக் கொள்ளலாம்.  

பள்ளிக்கல்வித்துறை

இதனையடுத்து  தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2023 - 2024ல்  கண்டறியப்பட்ட 8643 எண்ணிக்கையில், நிபந்தனைகளின் அடிப்படையில், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிக் கொள்ளலாம்.   அவ்வாறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள்  நியமனம் செய்யும்போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்  அதே  மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும். இந்த  நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு, நியமனம் செய்யப்பட வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!