159 ஆண்டுகள் பழமையான மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றம்!

இந்தப் பாலம் பழுதடைந்ததால் கனரக வாகன போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லை என பொறியாளர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து ரயில்வே மேம்பாலத்தை உயா்த்தியும், அகலப்படுத்தியும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, திருச்சி மாநகராட்சி, ரயில்வே நிா்வாகம் என இருதரப்பு பங்களிப்புடன் கட்டுமானப் பணிகள் 2024 மாா்ச் மாதம் தொடங்கியது. இதில், இருப்புப் பாதை செல்லும் இடத்தில் உள்ள வளைவுகளுடன் கூடிய பாலத்தை இடித்து அகற்றி புதிய பாலம் கட்ட வேண்டிய பணி ரயில்வே நிா்வாகத்தை சேர்ந்தது. இருபுறமும் சாலைகள் அமைக்கும் பணி மாநகராட்சி நிா்வாகத்துக்கானது. ஆனால், மாநகராட்சிப் பணிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ரயில்வே நிா்வாகப் பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சுமாா் ஓராண்டுக்கு பிறகு பாலத்தை முழுமையாக இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் பணிகளை பாா்வையிட்டாா். ஹைட்ராலிக் தொழில்நுட்ப இயந்திரங்களுடன், ஜேசிபி, ஹிட்டாச்சி வாகனங்கள் மூலம் பாலம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
ரயில்வே நிா்வாகத்தின் கட்டுமானப் பிரிவு துணை தலைமைப் பொறியாளா் வினோத்குமாா், உதவி நிா்வாகப் பொறியாளா் வெங்கட்ராமன் ஆகியோரின் மேற்பாா்வையில் நேற்று மே 13 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற பணியில் 60 போ், இரவுப் பணியில் 40 போ் என சுமாா் 100 தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். காலையில் கட்டுமானங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டன. இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி மாலைக்கு மேல் இரவு வரை நடைபெற்றது. இந்தப் பணிகள் காரணமாக இந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே வட்டாரத்தினா் “ பாலம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டுவிட்டது. இதன் தொடா்ச்சியாக கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளது. இந்தப் பாலமானது, இருவழிபாதையாக நகா் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ், நிதியுதவி பெற்று, ரயில்வே நிா்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பணிகளை செயல்படுத்தி வருகின்றன. இதில், ரயில் நிா்வாகத்தின் பங்களிப்பு ரூ.12 கோடி. மேம்பாலத்தின் நீளம் 31.39 மீ. அகலம் 20.70 மீட்டா் எனவும் திட்டமிடப்பட்டுளள்ளது. ரயில்வே பாலமானது கிழக்கு பகுதியில் 223.75 மீ நீளமும், 15.61 மீட்டா் அகலம் உடையதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ நீளமும், 15.61 மீ. அகலமுடையதாகவும் சாலையானது தடுப்புச் சுவா்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறுகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!