வருஷத்துக்கு 16 கோடி தான்!! 18 வயது இளைஞனாக மாறும் 45 வயது மனிதர்!!

 
ஜான்சன்

காசு இருந்தா என்ன வேணா பண்ணலாம்பா என்பது தான் லேட்டஸ்ட் டிரெண்ட். அதை நிரூபிக்கும் வகையில்  45 வயது பணக்காரர் ஒருவர் 18 வயதான இளைஞராக மாற சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இதற்கு ஆண்டுக்கு ரூ16 கோடி ஆகிறதாம். அமெரிக்காவில் வசித்து வரும் பிரையன் ஜான்சன் பெரும் பணக்காரர். சேர்த்து வைத்த பணத்தை செலவழித்து தன்னை இளைஞனாக்க புதுப்பித்து கொண்டே இருக்கிறார். வயது ஆக ஆக எல்லோருக்கும் கவலை தான். உடல் உபாதைகள், இயலாமைகள் என அணி வகுக்க ஆரம்பித்து விடும்.  

ஜான்சன்

மக்களின் இந்த சலிப்பை கருத்தில் கொண்டு அதனை மாற்றியமைக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு  பிரபல நிறுவனம் பெரும்பாலான மனிதர்கள் முதுமை குறித்துதான் அதிக கவலை படுவதாக ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்கள் ஆசையாக இருந்து வருகிறது. இதற்காக பெரும் தொகையை செலவிடவும் தயாராக உள்ளனர்.  எப்போதும் இளமையாகவே இருக்க முடியுமா என்பது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும்  பிரையன் ஜான்சன் பயோடெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.

 உடல் ஆரோக்கியம் குறித்த விவகாரத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவருக்கு தற்போது 45 வயது.  ஆனால், 18 வயது இளைஞர் போல தோற்றம் தரவேண்டும் என முடிவு செய்த அவர், தனது வீட்டின் ஒரு பகுதியை ஆய்வகமாக மாற்றி அதில்  30 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை பணிக்கு நியமித்துள்ளார். அந்த மருத்துவ குழுவினர் தினமும் பிரையன் ஜான்சனின் உடலை ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன் அவரின் உடல் உறுப்புகளை இளைஞரின் உடல் உறுப்புகளை போல் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜான்சன்

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நுரையீரல், தோல் தோற்றம், இதய செயல்பாடுகள் முதல் பிறப்புறுப்பு வரை அனைத்திலும் மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும், உடலில் பிற உறுப்புகளையும் இளைஞர் போன்ற செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த முயற்சியில் வெற்றி அடையப் போவதாகவும்  பிரையன் ஜான்சன் கூறியுள்ளார். இந்த செயல்பாடுகளுக்காக ஆண்டுக்கு சுமார் ரூ. 16 கோடியை இவர் செலவு செய்து வருகிறார். அவரின்  இந்த முயற்சி வெற்றிபெற்றால் அனைவரும் இதை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web