நெகிழ்ச்சி... 16 மாத குழந்தை உடல் உறுப்பு தானம் மூலம் 2 பேருக்கு புத்துயிர் !

ஒடிசாவில் மார்ச் 1ம் தேதி 2 வயது குழந்தை ஒன்று மூளைச்சாவு அடைந்தது.இந்தக் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். ஒரு காலக்கட்டத்தில் உடல் உறுப்பு தானம் என்பது மிக அரிதான நிகழ்வாக இருந்தது. ஆனால் தற்போது உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு காரணமாக பலரும் மறுவாழ்வு பெற்று வருகின்றனர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்ய தொடர்ந்து பலரும் முன் வருகின்றனர்.
இந்நிலையில், 16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு பேர் புது வாழ்வு அடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 16 மாத பெண் குழந்தையான ஜன்மேஷ் லென்காவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 1ம் தேதி குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதனையடுத்து மீளாதுயரத்தில் இருந்த குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவ குழு உடல் உறுப்பு தானம் குறித்து ஆலோசனை வழங்கியது. மிகுந்த மன வலிமையுடனும், இரக்கத்துடனும் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு கல்லீரலை அகற்றி டெல்லியில் உள்ள ILBS-க்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அபாய கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. அதேபோன்று குழந்தையின் சிறுநீரகங்கள் புவனேஸ்வரியில் உள்ள AIIMS-BBS-ல் ஒரு நோயாளிக்கு என்-பிளாக் முறையில் பொருத்தப்பட்டன. இதன்மூலம் 2 பேருக்கு புதிய வாழ்க்கையை 16 மாத குழந்தை ஜன்மேஷ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!