நக்சலைட்டுகள் 16 பேர் போலீசில் சரண்... பரபரப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் 2026 மார்ச் மாதத்துக்குள் முழுவதுமாக ஒழித்துக்கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடையும் நக்சல்களின் மறுவாழ்வுக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பெண் உட்பட 16 நக்சல்கள் போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களில் 9 பேர் கெர்லபெண்டா கிராம பஞ்சாயத்தில் வசித்து வந்தவர்கள் சரணடைந்தனர்.

இதன் மூலம் நக்சல் இல்லாத இடமாக மாறியிருப்பதாக அதிகாரி கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த ரூ.1 கோடிக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024 சுக்மா உட்பட 7 மாவட்டங்கள் அடங்கிய மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் 792 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
