16 வயதுக்குட்பட்டோர் பேஸ்புக், இன்ஸ்டா பயன்படுத்த தடை!

 
குழந்தைகள்
 


பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற செயலிகளைப் பயன்படுத்த இளம் சிறார்கள், குறிப்பாக 16 வயதுக்குள்பட்டோர் இவற்றைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து ஆஸ்திரேலியா திட்டமிட்டு வருகிறது.

16 வயதிற்குட்பட்டோர் இது போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டா

இது போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் மிக மோசமான வீடியோக்கள், செய்திகளை குழந்தைகள் பார்க்காமல் தடை செய்யும் முயற்சியில் தொடர்ந்து  தோல்வி அடைந்து விட்டதாகவும் எனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவற்றை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் கூறியிருக்கிறார்.

குழந்தை

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கூறுகையில், இது பெற்றோர்களுக்கும் சேர்த்து தான். சமூக ஊடகங்கள் குழந்தைகளை சீரழித்து வருகிறது, தற்போது அதனைத் தடுக்கும் நேரம் வந்து விட்டது. நான் எனது கணினியில் வேலை செய்யும் போது, எனக்குத் தேவையில்லாத விஷயங்கள் அதில் பாப்-அப் ஆகிறது. இதுவே 14 வயது குழந்தைக்கு நேர்ந்தால் என்னவாகும்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 16 வயதுக்குட்பட்டோர் பயன்படுத்த தடை இம்மாத இறுதியில் அமலுக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!