கேரளாவில் 160 பேருக்கு தட்டம்மை உறுதி!! கவனமா இருங்க மக்களே!!

 
தட்டம்மை

கேரளாவில் தற்போது தட்டம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது.தட்டம்மையை பொறுத்தவரை 6 மாதம் முதல் 5 வரை உள்ள குழந்தைகளிடையே அதிகம் பரவக்கூடியது.  கேரளாவில் தற்போதைய நிலவரம் குறித்து  இந்திய குழந்தைகளுக்கான மருத்துவ அகாடெமியின் மாநில தலைவர் விடுத்த செய்திக்குறிப்பில் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் இதுவரை 160 பேர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தட்டம்மை

இந்த பாதிப்புகளால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டதை பெற்றோர் உறுதி செய்து கொள்ள வேண்டும் என  கேரள அரசு வலியுறுத்தி உள்ளது. ஏனெனில் தட்டம்மை குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. மேலும் மத்திய சுகாதார அமைச்சகமும், பிறந்து 9 மாதம் முதல் 5 வரையிலான குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா கூடுதல் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகின்றன.

தட்டம்மை

குழந்தைகளுக்கு மட்டுமல்ல இளம்பிள்ளைகள்,  பருவ வயதினர் மற்றும் முதியவர்களுக்கும் சில நேரங்களில் இந்த பாதிப்பு ஏற்படலாம். இதன் அடிப்படையில் கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் ஆய்வு பணி மேற்கொள்ள மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மத்திய குழுக்கள் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து நோய் பரவல் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும்.  அத்துடன்  மாநில சுகாதார துறைகளுடன் இணைந்து சுகாதாரம், கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவையும் நடைமுறைப்படுத்தப்படும். மகாராஷ்டிராவில்  717 பேருக்கும், மும்பையில் 303 பேருக்கும் தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு இதுவரை தட்டம்மையால் 14 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web