இன்று வந்தே பாரத், சதாப்தி உட்பட 163 ரயில்கள் ரத்து... பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் தழுவிய பந்த் !

 
பஞ்சாப் பந்த்


பஞ்சாப் மாநிலத்தில் இன்று டிசம்பர் 30ம் தேதி விவசாயிகள் மாநிலம் தழுவிய பந்த் நடத்தி வருகின்றனர். இன்று மாலை 4 மணி வரை பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளும் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வந்தே பாரத், சதாப்தி உட்பட 163 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஞ்சாப் மாநிலம் முழுவதுமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. பஞ்சாப் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

பஞ்சாப்

இன்று மாலை போராட்டம் முடியும் வரை பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளும் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வர்த்தக அமைப்புகள் இந்த பந்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

டெல்லி மற்றும் பஞ்சாப் இடையே இயக்கப்படும் சதாப்தி மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்கள் உட்பட 163 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இவை தவிர, பயணிகள், எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகரில் ரயில் சேவைகள் இன்று ரயில் சேவைகள் கணிசமாக பாதிக்கப்படும் . ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற அண்டை பகுதிகளுக்கும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்களைப் பயணிகள் அறிந்து கொள்ள வசதியாக ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்றும் ரயில் நிலையங்களில் தொடர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

பந்த் புதுவை பாண்டிசேரி பாண்டி புதுச்சேரி

பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க மேற்பார்வையாளர்கள் மற்றும் வணிக ஆய்வாளர்கள் தங்கள் தலைமையகத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று டிஆர்எம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் கூடுதல் வசதிக்காக ரயில் ரத்துகள், குறுகிய கால நிறுத்தங்கள், குறுகிய கால ரயில் திசைதிருப்பல்கள் குறித்து பயணிகளுக்கு அவர்கள் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு விவசாய அமைப்புகள் அறிவித்துள்ள "ரயில் ரோகோ" போராட்டம் இன்று நடைப்பெற்று வரும் நிலையில் இந்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்றும் இன்று மாலை 4 மணிக்குப் பிறகு ரயில் சேவைகள் வழக்கம் போல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! இன்று வந்தே பாரத், சதாப்தி உட்பட 163 ரயில்கள் ரத்து... பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் தழுவிய பந்த் !

From around the web