1680 சிறப்பு பேருந்துகள்... தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் போக டிக்கெட் முன்பதிவு செய்துக்கோங்க!

 
அரசு பேருந்து

தமிழகத்தில் நாளை மகாவீர் ஜெயந்தி தொடங்கி ஏப்ரல் 14ம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை. வெள்ளிக்கிழமை ஏப்ரல் 11ம் தேதி மட்டும் வேலைநாள் . இதற்கு விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையாகிவிடும். இதனையடுத்து பணிக்காக சென்னை கோவையில் வசித்து வருபவர்கள் சொந்த ஊர் திரும்புவர். இவர்களின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி மகாவீர் ஜெயந்தி தொடங்கி தமிழ்ப்புத்தாண்டு வரை விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

  சிறப்பு பேருந்து

 இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்றும் ஏப்ரல் 11 மற்றும் 12 தேதிகளிலும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்றும், ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 190 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையில் 525 பேருந்துகளும், சனிக்கிழமையன்று 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையில் 525 பேருந்துகளும், சனிக்கிழமையில் 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web