16,932 சிறப்பு பேருந்துகள்!! பொங்கலுக்கு ஊருக்கு போக முன்பதிவு செய்துட்டீங்களா?!

 
பேருந்து

தமிழர் திருநாளாம்   பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஜனவரி  14 முதல் 17வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு  பொங்கலை கொண்டாட சொந்த ஊர் திரும்புவர்.  ஜனவரி  13 ம் தேதி வெள்ளிக்கிழமை முதல்  சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதில் பலர் ஏற்கனவே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து விட்டனர்.  

சிறப்பு பேருந்து

சிறப்பு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.இதன் அடிப்படையில் பொதுமக்களின் தேவை மற்றும் அவர்களின் வசதிகளை பொறுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளில்  தற்போது ஜனவரி12ம் தேதிக்கு முன்பதிவு  நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50000ம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு பேருந்து

ஜனவரி 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,749 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி சுமார் 5.37 லட்சம் பயணிகள் சிறப்பு பேருந்துகளில் பயணிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web