16 வயதே ஆன தன்வி ஷர்மா சர்வதேச பேட்மிண்டனில் அரையிறுதிக்குத் தகுதி!

 
பாட்மிண்டன் தன்வி பாட்மிண்டன் தன்வி

லக்னோவில் கோலாகலமாக நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேசப் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை தன்வி ஷர்மா, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அவர், தற்போது அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று (நவம்பர் 28) நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் வெறும் 16 வயதே ஆன தன்வி ஷர்மா, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த வீராங்கனை லோ சின் யான் ஹேப் உடன் மோதினார்.

பேட்மிண்டன் தன்வி

இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்த போதிலும், இளம் வீராங்கனை தன்வி ஷர்மா, சர்வதேச அரங்கில் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் மீது அவர் செலுத்திய ஆதிக்கம் தென்கொரிய வீராங்கனைக்குச் சற்று அதிர்ச்சி அளித்தது.

தன்வி ஷர்மா, தனது நுட்பமான ஆட்டத்தால் எதிராளியைத் திணறடித்து, இரண்டு செட்களிலும் புள்ளிகளை எளிதில் கைப்பற்றினார். முதல் செட்: 21-13,  இரண்டாவது செட்: 21-19 என்ற நேர் செட் கணக்கில் (2-0) வெற்றி பெற்ற தன்வி ஷர்மா, சையத் மோடி சர்வதேசப் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். 16 வயதிலேயே அவர் இந்தச் சாதனையைப் படைத்திருப்பது இந்தியப் பேட்மிண்டன் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்! இந்திய வீரர்கள் சாதிப்பார்களா?

தன்வி ஷர்மாவைப் போலவே, இந்தியாவின் மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா, முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், மற்றும் மிதுன் மஞ்சுநாத் ஆகிய இந்திய வீரர்களும் அந்தந்தப் பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதியை எட்டி உள்ளனர். இது இந்தப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!