17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்!

 
தவெக

 
தவெகவின்  முதல் பொதுக்குழு கூட்டம் இன்று மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. தவெகவின்  தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா,  தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட 2,000 பேர் கலந்து கொள்கின்றனர்.  

விஜய் தவெக மாநாடு

இந்நிலையில், தமிழக வெற்றி கழக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணைப்படி நடத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு குறித்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு, இருமொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு, பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கக்கூடாது, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உட்பட  17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web