ஆன்லைன் விளையாட்டு விபரீதமா? மாடியிலிருந்து குதித்து 17 வயது சிறுவன் உயிரிழப்பு!

 
மதுரை
 

மதுரை மாவட்டத்தில் மாடியில் இருந்து குதித்த 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிறுவன் ஆன்லைன் விளையாட்டு விபரீதத்தால் மாடியில் இருந்து குதித்தாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை காமராஜர்புரம் பகுதியிலுள்ள வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் மொட்டை என்ற ஹரீஸ் (17). அதே இவர் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த ஹரீஸ், தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் கடந்த ஓராண்டாகவே வீட்டில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. 

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் இருந்தபோது, ஹரீஸ் வீட்டின் மாடிப்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் திடீரென ஹரீஸின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மாடியில் மகனின் செல்போன் உடைப்பட்டுக் கிடந்துள்ளது.

ஹரீஸ் மாடியில் இருந்து கீழ குதித்திருப்பதும் தெரிய வந்தது. உடனே ஹரீஸை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது பெற்றோர் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரீஸ் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கீரைத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஹரீஸ் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட விபரீதத்தால் தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச போலீஸ்

இது குறித்து போலீசார் கூறுகையில், “சிறுவன் பள்ளிக்கூடம் செல்லாத நிலையில், அடிக்கடி செல்போனில் ‘ப்ரீ பயர்’ விளையாடி இருக்கிறார். இதை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்த நிலையில், பெற்றோரை மிரட்டுவதற்காக, மாடிக்குச் சென்று செல்போனை உடைத்து விட்டு, மாடியில் இருந்து குதித்திருக்கலாம். அதேநேரம், ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக சிறுவன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web