17 வயது சிறுமி பிரசவத்தில் பலி!! மருத்துவரை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
சிறுமி

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் வசித்து வந்தவர் 17 வயது சிறுமி. இவருடன் அதே பகுதியில் வசித்து வரும் இந்திரா நகரை சேர்ந்த அந்த சிறுமியின் உறவினர் ஒருவருடன் இளைஞர் ஒருவர்  நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த  சிறுமியின் பெற்றோர், வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் கருவை கலைப்பது சிரமம் எனவும் மருத்துவர் தெரிவித்தார். இதனால் சிறுமிக்கு வலி உருவாக்கி பிரசவம் பார்த்தனர்.

ஆம்புலன்ஸ்

அந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்தவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் வாழப்பாடியில், மருத்துவமனையில் சிறுமிக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கருதி பிளாஸ்டிக் தொட்டியில் வீசப்பட்ட நிலையில் சுமார் 10 மணி நேரம் கழித்து அந்த குழந்தை உயிருடன் இருப்பதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்,  

அவர்களே அந்த குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இச்சம்பவம் குறித்து  வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயசெல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் சேலம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்,  வட்டார மருத்துவ அலுவலர் , பிரசவம் பார்த்த பெண் மருத்துவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.


இந்நிலையில் மருத்துவருக்கு  மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் கூறியதால் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்து  முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர் செல்வாம்பாளை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிறுமியின் தரப்பினர் புகார் அளிக்க முன்வரவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web