18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர்... சுசீந்திரத்தில் 'சோடச அபிஷேகம்'... 1,00,000 லட்டுகள்; 2,000 லிட்டர் பால், குவியும் பக்தர்கள்!

 
அனுமன் ஆஞ்சநேயர் சுசீந்திரம் தாணுமாலய

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில், இன்று டிசம்பர் 19ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா மகா விமரிசையாக நடைபெற உள்ளது. நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் வல்லமை கொண்டவராகப் போற்றப்படும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, ஆண்டுதோறும் மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று இந்த ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 8 மணி அளவில், ஆஞ்சநேயருக்குச் சுமார் 2,000 லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட 16 வகையான புனிதப் பொருட்களைக் கொண்டு பிரம்மாண்ட 'சோடச அபிஷேகம்' நடைபெறுகிறது. முன்னதாக, இன்று அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மதியம் 1 மணி அளவில் ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கும், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கும் கண்கவர் 'புஷ்பாபிஷேகம்' நடைபெற உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக இன்று காலை 9 மணி முதல் கோவில் கலையரங்க மைதானத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மேலும், கோவிலுக்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் விநியோகம் செய்வதற்காகச் சுமார் ஒரு லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி வடை, விபூதி, குங்குமம் மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியவையும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளன. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருவார்கள் என்பதால், சுசீந்திரம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!