18 அடி உயர ஆஞ்சநேயருக்கு வடைமாலை தயார்... ஒரு லட்சம் லட்டுகள்.. சுசீந்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

 
லட்டு லட்டுக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில், மார்கழி மாத மூல நட்சத்திரத்தையொட்டி இன்று அனுமன் ஜெயந்தி விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது. மார்கழி அமாவாசையும் மூல நட்சத்திரமும் இணையும் நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்ததாகக் கருதப்படுவதால், ஆண்டுதோறும் இந்தத் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்களுடன் விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இன்று சுசீந்திரத்தில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்குச் சிறப்புப் பூஜைகளும், கண்கவர் புஷ்பாபிஷேகமும் நடைபெறத் தயாராகி வருகின்றன. இன்று காலை 8 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு 'ஷோடச அபிஷேகம்' எனப்படும் 16 வகையான புனிதப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் தொடங்க உள்ளன.

சுசீந்திரம்

பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், நெய், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இந்த வைபவத்தைக் காணக் குமரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் ஆஞ்சநேயர்

பக்தர்களின் வருகையை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக வழங்குவதற்கு சுமார் ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான வடைமாலைகளும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மாலையில் மலர்களால் அலங்கரிக்கப்படும் புஷ்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று அனுமன் ஜெயந்தி விரதமிருந்து இந்த 18 அடி உயர ஆஞ்சநேயரை வணங்கினால் வாழ்வில் அனைத்துத் தடைகளும் நீங்கி ஆனந்தம் பெருகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!