இந்தியா முழுவதும் 5 ஆண்டுகளில் 18000 க்கும் மேல் மூடல்!
நாடு முழுவதும் மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் குறித்து கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில் கடந்த சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கல்வி வட்டாரத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் தகவலின்படி, 2020–21 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 10,32,049 அரசுப் பள்ளிகள் இருந்தன. ஆனால் 2024–25 ஆம் ஆண்டில் இது 10,13,322 ஆக குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் 6,902 பள்ளிகளும், அஸ்ஸாமில் 2,008 பள்ளிகளும், ஒடிஸாவில் 1,631 பள்ளிகளும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 4,382 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு, பிகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தனியார் பள்ளிகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
