அதிர்ச்சி!! அமர்நாத் தரிசன புனித யாத்திரையில் 19 பேர் உயிரிழப்பு!!

 
அமர்நாத் பனிலிங்கம்

ஒவ்வொரு வருடமும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அமர்நாத்தில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக  உலகம் முழுவதும் பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கம்.  அந்த வகையில் நடப்பாண்டில்   அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1  முதல்   ஆகஸ்ட் 31 வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அமர்நாத் பயணத்தில் உள்ள பஹல்காம் வழிதடத்தில் பயணம் செய்த 3 பேர், பால்டால் பாதையில் பயணம் செய்த இருவர் உட்பட 5 பேர் கடந்த 24 மணி நேரத்தில்  மட்டும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  

அமர்நாத் பனிலிங்கம்

நடப்பாண்டில் மட்டும் இதுவரை அமர்நாத் யாத்திரைக்கு சென்றவர்களில் 19 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்திய - திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அமர்நாத் பயணம்  செங்குத்தான உயரமான மலைப்பாதையில் அமைந்திருப்பதுடன், ஆக்சிஜன் குறைவு  காரணமாக திடீர் மூச்சுத்திணறல் அல்லது மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து விடுகின்றன.

அமர்நாத் பனிலிங்கம்
நடப்பாண்டில் மட்டும் இதுவரை அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக  1, 37, 353 பக்தர்கள் சென்றுள்ளனர். இந்த பனி லிங்க தரிசனத்தை காண்பதற்காக ஒவ்வொரு ஆண்டும்   நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் உரிய அனுமதி பெற்ற சென்று வருகின்றனர்.  மிகவும் சவாலான  இந்த பயணத்தில் உயிரிழப்புக்கள்   நிகழ்வதும் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு   அமர்நாத் புனித யாத்திரையில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று புதிதாக   4665 புதிய பக்தர்கள் 150 வாகனங்களில் பயணத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள்  கான்வாயில் பாஹல்கம், பல்டால் பேஸ் கேம்பில் இருந்து அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக  சென்றுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web