தெலங்கானாவில் 19 மாவோயிஸ்டுகள் சரண்!
தெலங்கானாவில், மாவோயிஸ்ட் இயக்கத்தில் தேடப்பட்ட மூத்த தளபதி பட்ஸே சுக்கா (எ) தேவா தலைமையிலுள்ள 19 பேர் இன்று (ஜனவரி 3) காவல் துறை அதிகாரிகளுக்கு சரணடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து அவர்கள் பயன்படுத்தி வந்த ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த 19 பேர் அனைவருக்கும் மறுவாழ்வுக்கான மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களின் கீழ் ₹1.82 கோடி நிதியுதவி வழங்கப்படும். சரணடைந்த குழுவில் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் கன்கானலா ராஜி ரெட்டி (எ) வெங்கடேஷ் அவர்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பட்ஸே சுக்கா தலைமையில் 2013 ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் மஹேந்திர குமார் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவரைப் பிடிக்க அரசுப்படைகள் ரூ.75 லட்சம் சன்மானம் அறிவித்து தேடிக்கொண்டிருந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
