அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 19 பேர் உடல் கருகி பலி...90 பேர் படுகாயம்!

 
பீகார்
 

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், யமுனை விரைவுச்சாலையில் கடந்த 16-ஆம் தேதி கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட தொடர் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து 8 பேருந்துகள் மற்றும் 2 சிறிய வாகனங்கள் மோதி, தீப்பிடித்தன. இந்த கோர விபத்தில் பலர் வாகனங்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

முதலில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சிலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பலியானவர்களின் உடல்கள் கடுமையாக கருகியதால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இனி பனிமூட்டம் நேரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!