1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்... தேர்வு முடிவுகள் வெளியீடு... டி.ஆர்.பி. தளத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல்!

 
ஆசிரியர் தேர்வு வாரியம்.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை- 1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை- 1 ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்தத் தேர்வுக்கான முடிவுகள், இறுதி விடைக் குறிப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தற்காலிகப் பட்டியல் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு விவரங்கள்:

காலிப் பணியிடங்கள்: 1,996

நியமன அறிவிக்கை: கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

விண்ணப்பித்தோர்: தமிழ், கணிதம், அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட 14 பாடப் பிரிவுகளுக்காக 2,36,530 பேர் இணையவழியில் விண்ணப்பித்தனர்.

எழுத்துத் தேர்வு: கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

எழுத்துத் தேர்வு முடிவுகள், இறுதி விடைக் குறிப்பு   ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://trb.tn.gov.in -இல் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, 1:1.25 விகிதாச்சாரப்படி, மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தற்காலிகப் பட்டியலை (Certificate Verification List) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் ஆசிரியை பேராசிரியர்

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்வதற்கான வழிமுறைகள், ஆளறிச் சான்றிதழ் படிவம் உள்ளிட்ட அனைத்துப் படிவங்களையும் டி.ஆர்.பி. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அழைப்புக் கடிதம் வேறு வழிகளில் அனுப்பப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்: சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம் மற்றும் தேதி அழைப்புக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள், அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தாலும், அடுத்த கட்டத் தேர்வுப் பணிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல் தொடர்பான குறைகள் அல்லது கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால், trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று நாட்களுக்குள் அனுப்பலாம். பிற வழிகளில் அனுப்பப்படும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் உடனடியாக இணையதளத்திற்குச் சென்று தங்களது முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!