‘மிஸ் இந்தியா 2023’ பட்டம் வென்றார் நந்தினி குப்தா!! குவியும் பாராட்டுக்கள்!!

 
நந்தினி குப்தா

மிஸ் இந்தியா அழகிபோட்டி இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு ‘மிஸ் இந்தியா 2023’ நடைபெற்றது. மணிப்பூரின் இம்பாலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் , 29 மாநிலங்களில் இருந்து அழகிகள் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் ஒய்யாரமாக நடந்துசென்று தங்கள் அழகை மிளரச்செய்தனர்.

இறுதியில் ‘மிஸ் இந்தியா 2023’ பட்டத்தை 19 வயதான நந்தினி குப்தா வென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நந்தினி குப்தா ‘மிஸ் இந்தியா 2023’ பட்டத்தை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரை தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாம் இடமும், மணிப்பூரின் தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாம் இடமும் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள உலக அழகிக்கான போட்டியில் நந்தினி, இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். 

 ‘மிஸ் இந்தியா 2023’ பட்டம் வென்ற நந்தி குப்தா குறித்து பார்க்கலாம்.. ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியை சேர்ந்தவர் நந்தினி. லாலா லாஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார். தனது அழகு மற்றும் ஆளுமையின் மூலம் மிஸ் இந்தியா பட்டத்தை அவர் வென்றுள்ளார். ரத்தன் டாடா தனது இன்ஸ்பிரேஷன் எனவும் சொல்கிறார் அவர்.

நந்தினி குப்தா

“உலகமே இதோ அவர் வருகிறார். வசீகரத்தாலும், அழகினாலும் எங்களை ஈர்த்து நெஞ்சங்களை வென்றார். அவரை உலக அழகி பட்டத்திற்கான மேடையில் பார்க்க ஆவலுடன் காத்துள்ளோம். நந்தினி குப்தா, உங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது, என மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் வசித்து வரும் நந்தினி லாலா லாஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார். தனது அழகு மற்றும் ஆளுமையின் மூலம் மிஸ் இந்தியா பட்டத்தை  தற்போது வென்றுள்ளார்.  வாழ்வில் எழுகின்ற சவாலை கற்றலுக்கான வாய்ப்புகளாக கருதி தான் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ரத்தன் டாடா தனது இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார் நந்தினி. 
“ரத்தன் டாடா மனிதகுலத்திற்காக அனைத்தும் செய்கிறார். தனது பெரும்பாலான சொத்துகளை நன்கொடையாக வழங்கி  இருப்பதும்,  மில்லியன் கணக்கான மக்களால் நேசிக்கப்படுபவராகவும் இருப்பது தான் இன்ஸ்பிரேஷன்” என ரத்தன் டாடா குறித்து நந்தினி தெரிவித்துள்ளார். நந்தினி மிஸ் இந்தியா ஆனது குறித்து அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இப்படிப் பதிவிடப்பட்டுள்ளது. அதில் “உலகமே இதோ அவர் வருகிறார். வசீகரத்தாலும், அழகினாலும் எங்களை ஈர்த்து நெஞ்சங்களை வென்றார். அவரை உலக அழகி பட்டத்திற்கான மேடையில் பார்க்க ஆவலுடன் காத்துள்ளோம். நந்தினி குப்தா, உங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
From around the web