+2 பொதுத் தேர்வு கட்டணம் இவர்களுக்கு கிடையாது! மாணவர்கள் உற்சாகம்!

 
தேர்வு

10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களே... வரவிருக்கின்ற பொதுத்தேர்வு உங்களது வாழ்க்கையின் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கப் போகும் தேர்வு. பொருட்காட்சி, புத்தக கண்காட்சி, பொங்கல் திருவிழா, சென்னை சங்கமம் என்று திருவிழாக்களில் மனதை அலைபாய விடாமல், இன்னும் மிச்சம் இருக்கிற காலங்களில் பொதுத்தேர்வுக்கு படித்து தயாராகுங்க. இப்போது புதிதாக திட்டமிட்டு படிக்க துவங்கினால் கூட பொதுத்தேர்வுகளில் உங்களால் அத்தனைப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சியடைய முடியும்.

இந்த கல்வியாண்டுக்கான  பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்புக்கு மார்ச் 13ம் தேதி துவங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டாலும்,  செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க இருக்கிறது. தேர்வுக்கு தயாராகும் வகையில் அடுத்தடுத்த அறிவிப்புக்களை தேர்வுத்துறை வெளியிட்டு வருகிறது.

தேர்வு

அந்த வகையில் நேற்று ஜனவரி 5ம் தேதி  ஹால்டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பிற்பகல்  2 மணி முதல் அரசு தேர்வுகள் இயக்கக அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge1.tn.gov.in  மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்கள்  பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. 

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு
இந்நிலையில் தமிழை  பயிற்று மொழியாக கொண்டு பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.  மற்ற மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து ஜனவரி 20ம் தேதிக்குள் ஆன்லைன்  மூலம் செலுத்த வேண்டும் எனவும் அரசு தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி செய்முறைத் தேர்வுக்கு 225, மற்ற தேர்வுகளுக்கு ரூ 175 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web