ஒரே பிரசவத்தில் 2 கன்றுக்குட்டிகள்!! பசுவுடன் செல்பி!!

 
பசுமாடு, 2 கன்றுக்குட்டி

மனிதர்களில் ஒரே பிரசவத்தில் ஒரு குழந்தை சாதாரணம் . சமீபமாக இரு குழந்தை பிரசவம் சாதாரணமாகி வருகிறது. 3, 4 தொடங்கி 9 குழந்தைகள் வரை பிறந்துள்ளன. அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்து 9 ம் ஆரோக்கியமாக வளர்ந்து வருகின்றன . விலங்குகள் குறிப்பாக மாடுகளை பொறுத்தவரை ஒரு பிரசவத்தில் ஒரு கன்று குட்டி தான் எப்போதுமே. அதற்கு மேல் இருந்தால் அவை ஏதாவது குறைபாடுடன் இருக்கும். வித்தியாசமாக 2 தலை, 3 கால்கள், என அபூர்வமாக பிறந்து விடும்.

பசுமாடு, 2 கன்றுக்குட்டி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் குமாரசாமி. இவர் விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் 3 மாடு மற்றும் சில ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.  இவர்கள் வளர்த்து வரும் சிந்து வகை பசு ஒன்று ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்றுள்ளது. 2 கன்றுகளை ஈன்ற பசுவிற்கு இது மூன்றாவது பிரசவம். மூன்றாவது பிரசவத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்ற பசுவை பலரும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.  புதிதாக பிறந்த இரண்டு கன்றுகளுக்கு ராமாயி, லட்சுமியாயி என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். . இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

அதே போல் அப்படி ஒரே பிரசவத்தில் 2 கன்றுக்குட்டிகள் ஈன்றாலும் ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் இருக்கும். ஆனால் பொத்தனூரில் வசித்து வரும் குமாரசாமியின் வீட்டில் வளர்ந்து வரும் சிந்து வகை பசுமாடு ஒன்று 2 பெண் கன்றுகளை ஈன்றுள்ளது பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கன்றுக்குட்டிகளை அக்கம் பக்கத்து கிராமத்தில் வசிப்பவர்கள் வந்து பார்த்து செல்கின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web