பயங்கரம்... கணவன் மனைவி சண்டை.... 2 குழந்தைகள் வெட்டிக் கொலை!
தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் அசோக் குமார். 40 வயதான இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 38 வயது தவமணி . இவர்களுக்கு வித்யதாரணி வயது 13, அருள்பிரகாஷ் வயது 5, அருள்குமாரி வயது 10 என 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், உறவினர்கள் காலை அவரது வீட்டிற்கு உறவினர்கள் சென்றபோது, அங்கு தவமணி மற்றும் குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மூவரும் ரத்த காயங்களுடன் வெட்டுப்பட்டு இருந்த நிலையில், குழந்தைகளான அருள்பிரகாஷ், வித்யதாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரியை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமறைவான கூலித் தொழிலாளி அசோக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மனைவி, குழந்தைகளை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
