மின்சாரம் தாக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு... புல் அறுக்க சென்ற போது சோகம்!
Mar 6, 2026, 10:47 IST
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகிருஷ்ணன், நாராயணன் ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

மாட்டிற்காக புல் அறுக்க சென்றபோது ஸ்ரீகிருஷ்ணனை திடீரென மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் மின்சாரத்தில் சிக்கியதை பார்த்த நண்பர் நாராயணன் உடனே காப்பாற்ற முயன்றார்.
அப்போது நாராயணனுக்கும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
