"பிள்ளைகள் போன இடத்துக்கே நானும் போறேன்...": குளத்தில் மூழ்கி இறந்த 2 மகள்கள்... துக்கம் தாளாமல் தாயும் தற்கொலை!

 
 விழுப்புரம்  விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோர விபத்தின் தொடர்ச்சியாக மற்றுமொரு சோகம் அரங்கேறியுள்ளது. கடந்த 14-ஆம் தேதி அங்காளம்மன் கோவில் திருவிழாவின் போது, அங்குள்ள குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்ற ஹர்ஷினி (11) மற்றும் கயல் (8) ஆகிய இரு சிறுமிகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கிய நிலையில், தற்போது அவர்களது தாய் ஜெயந்தியும் உயிரை மாய்த்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

தனது இரண்டு கண்மணிகளையும் ஒரே நாளில் பறிகொடுத்த தாய் ஜெயந்தி, அன்று முதல் மகள்களின் நினைவாகவே அழுது புலம்பி வந்துள்ளார். உறவினர்கள் எவ்வளவு தேறுதல் கூறியும், மகள்கள் இல்லாத வாழ்க்கையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்று மதியம் கணவர் அய்யனார் வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஜெயந்தி மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

போலீஸ்

தகவலறிந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார், ஜெயந்தியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வாரத்தில் இரண்டு பிஞ்சு உயிர்களோடு, பெத்த தாயும் பிரிந்த சம்பவம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தையே ஆழ்ந்த துயரத்தில் மூழ்கடித்துள்ளது. "தாமரைப்பூ பறிக்கப் போன பிள்ளைகள், அம்மாவையும் தன்னோடு இழுத்துக்கொண்டார்களோ?" என அந்த ஊர் மக்கள் கண்ணீர் மல்கப் பேசி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!