தமிழகத்தில் மீண்டும் இரு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை!
தமிழகத்தில் நாளை (ஜன.2) மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சதீவு–குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இதற்குக் காரணம். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. மெரினா கடற்கரையில் புத்தாண்டை வரவேற்ற மக்கள் மழையிலும் உற்சாகமாக கொண்டாடினர். இன்று காலை வரை பதிவான மழையில் சென்னை பெரம்பூரில் 11 செ.மீ., எண்ணூரில் 10 செ.மீ., கத்திவாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

4 முதல் 6-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும். 3 முதல் 5-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டமும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
