வைரல் வீடியோ!! 2 யானைகள் ஆக்ரோஷத்துடன் சண்டை!!

 
காட்டுயானை

வனப்பகுதிகளை எல்லாம் குடியிருப்பு பகுதிகளாக்கி வசிக்க தொடங்கி விட்டோம். வன விலங்குகள் தங்கள் வாழ்விடத்திற்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்ததை போல் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றி திரிகின்றன. அதனுடைய இடத்தில் நாம் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளோம். எங்களுடைய இடம் இது எனக் கூறுவதற்காக வருவதை போல் அவ்வப்போது வந்து தலைகாட்டி செல்கின்றன.


ஆனால் நாம் வசிக்கும் பகுதிகளுக்குள் வந்து விட்டதாக அலறி கூச்சலிடுகிறோம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம்  கிராமங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் இருக்கும்  காட்டுயானை, காட்டுப்பன்றி உட்பட  பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.கடந்த சில மாதங்களாகவே காட்டு யானை பாகுபலியுடன்‌ கூடுதலாக 3 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்து சாலையை கடப்பதை காணலாம். ஊருக்கு மத்தியில் உள்ள இந்த சாலையில் தினமும் காலை மாலை எனு உலாவரும் காட்டு யானைகள் தற்போது  கால்நடைகளுடன் வாக்கிங் வரத் தொடங்கியுள்ளது.

யானை

இரண்டு யானைகளுக்கு இடையே கடுமையான சண்டை சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இரண்டு யானைகள் மோதும் பயங்கரமான காட்சி இடம்பெற்றுள்ளது.இந்த வீடியோவை பார்க்கும் போது திகில் நிறைகிறது. மெல்லிய நடுக்கம் ஏற்படுகிறது. வீடியோவில் , ​​இரண்டு யானைகளும் ஏதோ ஒரு விஷயத்துக்கிடையே கடும் கோபத்தில் இருப்பது போல் சண்டையிடுகின்றன.  இந்த இரண்டு யானையும் ஒருவருக்கொருவர் இரத்த தாகம் அடைந்து கடுமையாக சண்டையிடுகிறார்கள். வனப்பகுதியில் இரண்டு யானைகள் நேருக்கு நேர் மோதும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மோதல் நீண்ட நேரம் நீடிக்கிறது.  இருவருமே பலத்தில் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், இறுதியில் இருவரும் அமைதியடைந்து ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்தபடியே செல்கின்றன. 

மாடுகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பி ஊருக்குள் வரும் போது காட்டுயானைகளும் உடன் வருகின்றன. பசு மாடுகள் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஒய்யாரமாக நடந்து வந்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாகவும் சற்று அச்சத்துடன் வீடுகளுக்குள் கதவை பூட்டிய படி நின்று வேடிக்கை பார்த்தனர்.வனப்பகுதியை ஒட்டியே  சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதுவரை காட்டு யானை பாகுபலி யாரையும் தாக்கியதில்லை . சமயபுரம் பகுதி மக்களின் ஒரு குடும்ப நபராகவே மாறிவருகிறது. ஆனால் மற்ற யானைகள் குடியிருப்புக்குள் அங்கும் இங்கும் ஓடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web