பள்ளிப் பேருந்து மோட்டார் சைக்கிளில் மோதி 2 சிறுமிகள் பரிதாப பலி!
பெங்களூரில் பள்ளிப் பேருந்து மோதி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பெங்களூரின் தனிசந்த்ரா பகுதியில் புதன்கிழமை காலை இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. சாலையைக் கடக்க முயன்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
காவலராக பணியாற்றும் நாகன கௌடா தனது 2 வயது மகள் வர்ஷா மற்றும் சகோதரரின் 4 வயது மகள் பானுவை அருகிலுள்ள கடைக்கு பால் வாங்க மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது அவர் சாலையைக் கடக்க காத்திருந்தபோது அந்த வழியாக வந்த பள்ளிப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குழந்தைகள் இருவரும் சாலையில் விழுந்தனர்.
இதையடுத்து பேருந்து குழந்தைகள் மீது ஏறி இறங்கியதால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் நாகன கௌடா காயமின்றி உயிர் தப்பினார். பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
