+2 முடிச்சிருந்தா போதும்... பாதுகாப்புப் படையில் ரூ.2.5 லட்சம் வரை சம்பளம்!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நாட்டின் மிக உயரிய பதவிகளை நிரப்பும் அமைப்பாகும். தற்போது இந்த அமைப்பு, தேசியப் பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் கடற்படை அகாடமி (Naval Academy) ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு எனத் தேர்வர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை உட்படக் கடற்படை அகாடமி (10+2) ஆகிய பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என மொத்தம் 394 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பள்ளிப் படிப்பில் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியப் பாடங்களைப் படித்திருப்பது கட்டாயமாகும். தற்போது 12ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், இந்தப் பணிகளுக்கு திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2007-க்கு முன்போ அல்லது ஜூலை 2010-க்கு பிறகோ பிறந்திருக்கக் கூடாது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்பச் சம்பளமே ரூ. 56,100 முதல் தொடங்குகிறது. லெப்டினன்ட் முதல் மேஜர் வரையிலானப் பதவிகளுக்கு ரூ. 1,77,500 வரையிலும், உயர் பதவிகளான ராணுவத் தளபதி நிலை வரை ரூ. 2,50,000 வரை சம்பளம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுகின்றன. தேர்வர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் உளவு மற்றும் ஆளுமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய முக்கிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தேர்வு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். இருப்பினும், பெண்கள் மற்றும் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக மட்டுமேச் சமர்ப்பிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர் 30, 2025 ஆகும். எனவே, மேலும் முழுமையான விவரங்களுக்கு யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் படித்து உறுதி செய்த பிறகு உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
