கர்நாடகாவில் ரசாயனத் தொழிற்சாலையில் வெடிவிபத்து - 2 பேர் பலி, 4 பேர் படுகாயம்!

 
ரசாயண தொழிற்சாலை வெடிவிபத்து

மண்டியா மாவட்டம் பாசரலு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிகடி கிராமத்தில் செயல்பட்டு வந்த 'கீர்த்தி கெமிக்கல்ஸ்' தொழிற்சாலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்தத் தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளாகவே மூடப்பட்டுக் கிடந்தது. தற்போது அந்தத் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தன. தொழிலாளர்கள் ரசாயனத் தொட்டியை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதில் இருந்த எஞ்சிய ரசாயன வாயுக்கள் காரணமாகத் தொட்டி பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

பள்ளி மானவி தற்கொலை

இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லு கான் (27) மற்றும் ஆகாஷ் (26) ஆகிய இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காசிம், ரவி, மஹந்தேஷ் மற்றும் ராஜீவ் குமார் ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மண்டியா மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரசாயனத் தொட்டியைத் திறக்க 'கேஸ் கட்டர்' பயன்படுத்தியபோது, அதிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி எஞ்சியிருந்த ரசாயன வாயுவுடன் வினைபுரிந்து வெடிப்பை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2022-23 ஆண்டுகளில் இந்த ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக விவசாயப் பயிர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டதால், உள்ளூர் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே இந்த ஆலை மூடப்பட்டு, தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வந்தது.

பாகிஸ்தானில் வெடிவிபத்து... 4 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் காயம்!

பாசரலு போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். உரியப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கவனக்குறைவாகச் செயல்பட்டதற்காகத் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 106-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தில் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!