கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 2 பேர் பலி!
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கல் குவாரியில் சனிக்கிழமை இரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்ததும் காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் கற்கள் சிதறிக் கிடந்ததுடன், பெரிய பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இரவு நேரம் என்பதால், எத்தனை தொழிலாளர்கள் அங்கு பணியில் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பெரியளவில் கற்கள் விழுந்திருப்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்களும் மோப்ப நாய்களும் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
