இந்தியன் ரயில்வே பாதுகாப்பு துறையில் 1,77,924 காலி பணியிடங்கள்!

 
இந்தியன் ரயில் ரயில்வே

ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில்  2 எக்ஸ்பிரஸ் ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த வழித்தடத்தில் 3 நாட்களில் ரயில்கள் செல்லத் தொடங்கின. ஆனால் அந்த விபத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்னமும் நீடித்து வருகின்றன. ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதேசத்தில் வசித்து வரும்  சந்திர சேகர் கவுர் என்பவர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்  ரயில்வேயில் தற்போதைய நிலையில் உள்ள காலி பணியிடம் குறித்து ஆர்டிஐ க்கு  கேள்வி எழுப்பி இருந்தார்.

ரயில் முன்பதிவு

இதற்கு ரயில்வே அமைச்சகம் பதில் செய்திக்குறிப்பு ஒன்றை அளித்துள்ளது. அதில்  ஜூன்1,  2023  நிலவரப்படி  ரயில்வேயில் குரூப் சி பிரிவில் 2,74,580 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு பிரிவில் மட்டும்  1,77,924 பணியிடங்கள்  காலியாக உள்ளன. 2022 டிசம்பரில் ரயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இப்போது 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபருக்குள் 1.52 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்படும்.  

ரயில்

ரயில்வே, ஏற்கனவே 1.38 லட்சம் பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கி இருப்பதாக   அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 90,000 பேர் வரை பணியில் சேர்ந்துள்ளனர். இவற்றில் 90 சதவீத பணியிடங்கள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவை என்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில் இத்தனை காலியிடங்கள் இருப்பின் ரயில்களின் பயணம் செய்யும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web