+2 பாஸ் ஆனவர்களுக்கு மத்திய அரசில் வேலை! 1458 பணியிடங்களுக்கான அறிவிப்பு!

 
மத்திய அரசு வேலை

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும்.. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எஃப்.)  காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1458 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு முறையும் ஆன்லைன் மூலமாகவே நடைப் பெறுகிறது. நமக்கு எங்கே கிடைக்க போகிறது என்று மனம் தளராமல் முயற்சி செய்யுங்க. ஆல் த பெஸ்ட்.

பொதுவாகவே தமிழகத்தில் இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு முயற்சி செய்வது போல, மத்திய அரசின் தேர்வுகளுக்கு முயற்சி செய்வதில்லை. மாநில அரசு தேர்வுகளுக்கு தயாரானவர்கள் இந்த தேர்வுகளையும் எழுதலாம். நிச்சயமாக மனம் தளராமல்  முயன்றால் வேலை கிடைக்கும்.

போலீஸ்

அசிஸ்டென்ச் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் ஸ்டெனோ வேலை 143 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதே போல ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களில் 1315 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 1458 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : +2
வயது :

ஜனவரி 25,2023ம் தேதி அடிப்படையில் 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகைகள் உள்ளது.

தேர்ச்சி முறை :

ஆன்லைன் மூலமாக எழுத்துத் தேர்வு. ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

எஸ்.ஐ. தேர்வு

பிற தேர்வுகள் நடைப்பெறும் இடங்கள் :

சென்னை, மதுரை, கோவை, திருச்சி,கடலூர், ஈரோடு, கரூர், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர்
விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் :

ரூ.100 பெண்கள், எஸ்.சி.,/  எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.1.23
மெலும் விபரங்களுக்கு : crpf.gov.in

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web