சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 பேர் கைது... டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சட்டவிரோதமாக ஓடையில் மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு கோனார் கோட்டை கிராமத்தில் அரசு புறம்போக்கு ஓடையில் அனுமதி இன்றி சிலர் மணலை திருடி கடத்துவதாக கயத்தாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த ஓடைப்பகுதிக்கு சென்றபோது, சிலர் சட்டவிரோதமாக மணலை பொக்லைன் எந்திரம் மூலமாக டிப்பர் லாரியில் ஏற்றி கொண்டு இருந்தனர். போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்து சென்று, மணல் அள்ளி கொண்டிருந்த 2பரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் நாயக்கர்பட்டி நாளாந்தாலா கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த மாடசாமி மகன் காளிராஜ் (26), உசிலாங்குளம் அம்மன் கோவில் தெரு பத்திரகாளி பாண்டின் மகன் காளிராஜ் (22) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!