போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா உட்பட 2 பேர் கைது!

போதைப்பொருள் குற்றச்சாட்டில் நடிகர் ஸ்ரீகாந்த்தைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர். முன்னதாக நேற்று நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இந்த வார தொடக்கத்தில், நடிகர் ஸ்ரீகாந்தும் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணாவுடன், போதைப்பொருள் கடத்தல்காரர் கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையில் நடந்த ஒரு பப்பில் நடைபெற்ற சண்டையுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சண்டை குறித்த விசாரணையின் போது போதைப்பொருள் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர், இது தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த மேலும் பலரை இதில் சிக்க வைக்கக்கூடிய விசாரணையைத் தூண்டியது. இதன் தொடர்ச்சியாக நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!