வனப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை… 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

 
terroists terroists
 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான இடங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன.

தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு குகையில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதில் தாக்குதல் மேற்கொண்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. நீண்ட நேரம் நடந்த மோதலில் நிலைமை பதற்றமாக இருந்தது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!