அசத்தல்... 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 8ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்திருந்தார். விருதுநகர் மாவட்டத்தில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்திலும் ராணிப்பேட்டை மாவட்டம் குறைவான தேர்ச்சி சதவீதம் பெற்று கடைசி இடத்திலும் இருந்தது.
இதில் இரட்டையர்கள் இரண்டு பேர் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூவில் வசித்து வருபவர்கள் சுவாமிநாதன்- ஜெயசுதா தம்பதி. இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை குழந்தைகள். இருவரும் வடவள்ளி பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு பாடப்பிரிவை எடுத்து படித்தனர். அதில் நிரஞ்சன் கம்ப்யூட்டர் சயின்ஸ், நிவேதா பிசினஸ் மேத்ஸ் பிரிவும் படித்துள்ளனர்.
சமீபத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நிரஞ்சனும், நிவேதாவும், 600க்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். இருவரும் சிறுவயதிலிருந்தே பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்து வந்தனர். எப்போதும் படிப்பு விஷயத்தில் இருவருக்குமே கடும் போட்டி இருந்து வந்தது. வெவ்வேறு பாடப்பிரிவுகளில் படித்தாலும், வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுத சென்றாலும் இறுதியாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். இது ஆசிரியர்கள், நண்பர்கள், பெற்றோர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இவர்களது மதிப்பெண் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!