பயங்கரம்... நடைமேடையில் ஏறிய அரசுப் பேருந்து 2 வயது சிறுவன் பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மத்திய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை அரங்கேறிய கோர விபத்தில் இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். காலை 7 மணி அளவில் பயணிகள் நடைமேடையில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது அங்கு வந்த மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நடைமேடைக்குள் புகுந்தது. இதில் தனது பெற்றோருடன் நின்றுகொண்டிருந்த ஹஸ்ரத் அலி என்ற சிறுவன் மீது பேருந்து மோதியதில் அவன் படுகாயமடைந்தான்.
Karnataka’s reckless KSRTC bus driver!
— Nabila Jamal (@nabilajamal_) April 1, 2026
At Haveri Central Bus Stand at 7am today
2yr old boy killed, three others hospitalised..driver on the run pic.twitter.com/oDa39o1a13
படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு கிம்ஸ் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டான். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்தது அவனது குடும்பத்தினரிடையே ஈடு செய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பாங்காபூரைச் சேர்ந்த வாசுதேவ் உள்ளிட்ட மேலும் மூவர் படுகாயமடைந்து தற்போது மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து நிலையத்திற்குள் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் பேருந்தை ஓட்டி வந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேருந்து நடைமேடைக்குள் புகுந்து பயணிகள் மீது மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக ஹாவேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
