வழி தவறி தனியாக அழுது கொண்டிருந்த 2 வயது குழந்தை... பெண் காவலரின் நெகிழ்ச்சி செயல்!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே 2 வயது பெண் குழந்தை தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் லிவியா சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையை மீட்டு ஆசுவாசப்படுத்தினார். பின்னர் மறைமலைநகர் போலீசாருக்கும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்தனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதியர் என தெரியவந்தது. காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பெற்றோரை பார்த்ததும் குழந்தை மகிழ்ச்சியுடன் ஓடி சென்று கட்டிப்பிடித்தது.
பின்னர் குழந்தையை போலீசார் பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை வழிதவறி சென்றதா அல்லது யாரேனும் கடத்த முயன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. பெண் காவலர் லிவியா மற்றும் மறைமலைநகர் போலீசாரின் நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
