2 வயசுல உலக சாதனை! மழலை குரலில் தேசிய கீதம்!

 
சுமித்ஷா

மெத்த படித்ததாக சொல்லிக் கொள்பவர்களில் பலரை திடீரென எழுந்து நின்று தேசிய கீதத்தையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ சொல்லச் சொன்னால் விஷயம் விவகாரமாகிவிடும். பாதி அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து தெரியாமல் தான் இன்னமும் வாயசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

2 வயசு தான் ஆகுது. சுட்டித்தனத்துடன் கூடிய மழலைக் குரலில் தேசிய கீதத்தை அழகாக பாடி அசத்துது ராமநாதபுரத்தைச் சேர்ந்த குட்டி பாப்பா. கொஞ்சும் மழலையில் பாடிய பாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்களும் குவிகிறது. 

2 வயது குழந்தை சுமித்ஷா, குழந்தையாக மழலை மொழியில் துருதுருவென பேசுவதில் ஆர்வம் காட்டிய போதே, சுமித்ஷாவின் தாய் சக்தி, ஞாபக சக்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து, குழந்தைக்கு தேசிய கீதத்தையும், ஆங்கில எழுத்துக்களையும், சிறு சிறு வார்த்தைகளையும் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். 

சுமித்ஷா

குழந்தையின் ஞாபக சக்தியைப் பாராட்டி, தேசிய புக் ஆஃப் ரெக்கார்ட், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட், இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்துள்ளன. வீழு முழுக்க பதக்கங்களும், கோப்பைகளுமாக நிரம்பி இருக்கிறது.  
வாழ்த்துக்கள் சுட்டி!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web