புறவழிச்சாலையில் லாரி மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 
பலி

பூந்தமல்லி புறவழிச்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், காய்கறி சந்தையில் பணியாற்றி வந்த இரு இளைஞர்கள் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை பூந்தமல்லி பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல் (19) மற்றும் சந்தோஷ் (16) ஆகிய இரு இளைஞர்கள் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். நேற்று அதிகாலை சுமார் 3:30 மணி அளவில், சந்தையில் வேலையை முடித்துவிட்டு தேநீர் அருந்துவதற்காக இருவரும் சாலையைக் கடக்க முயன்றனர்.

பலி

அப்போது ஆந்திர மாநிலம் நகரியிலிருந்து சென்னை ராயப்பேட்டை நோக்கி அதிவேகமாக வந்த, கோழி ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இரு இளைஞர்கள் மீதும் பயங்கரமாக மோதியது.

லாரி மோதிய வேகத்தில் இரு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த நிர்மல் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலி

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிசார் அகமது என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அதிகாலை நேரத்தில் ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இருவரும் மிகவும் இளம் வயதினர் என்பதால், பூந்தமல்லி காய்கறி சந்தை வளாகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் எனப் போக்குவரத்துப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!