பிரபல நடிகர் கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 இளைஞர்கள் படுகாயம்!
பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜூ பயணித்த கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். கடந்த 50 ஆண்டுகளாக மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் அவர் சுமார் 400 படங்களில் நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
#WATCH | Thiruvananthapuram, Kerala: CCTV footage of the collision that occurred between actor Maniyanpilla Raju's car and a bike on 5th February, injuring 2 people.
— ANI (@ANI) February 6, 2026
(Source: Police) https://t.co/a9cKXMQnko pic.twitter.com/xCZtHs5b2X
திருவனந்தபுரத்தில் உள்ள வழுதக்காடு கிளப் அருகே வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. மணியன்பிள்ளை ராஜூ பயணித்த கார் பிரதான சாலையை கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர்கள் காரின் முன்புறம் மோதி கீழே விழுந்தனர். இதில் சூரஜ் மற்றும் நிதேவ் ஆகிய இருவரும் கடுமையாக காயமடைந்தனர்.
காயமடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில் கார் மெதுவாக சாலையை கடக்க முயன்றதும், இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்து மோதியதும் பதிவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
