அங்கன்வாடியில் 20 குழந்தைகள் அறையில் பூட்டி வைப்பு... கத்தி கூச்சலிட்ட பிஞ்சுகள்... பகீர் வீடியோ!
புனே ஹின்ஜாவாடி அருகே உள்ள அங்கன்வாடி எண்–3ல் நடந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய குழந்தைகள், ஓர் மணி நேரத்திற்கு முழுவதும் உள்ளே பூட்டப்பட்டதாக வீடியோ வெளிவந்தது. அதில், சுமார் 20 குழந்தைகள் பயந்து அழுதுகொண்டிருக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது
#WATCH | #Pune: 20 Children Locked Inside Hinjawadi Anganwadi; Visuals Sparks Outrage
— Free Press Journal (@fpjindia) November 27, 2025
Read story: https://t.co/Bg4lHCcONf #PuneNews #Maharashtra pic.twitter.com/3gbtc4dhC2
செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை குழந்தைகள் அறைக்குள் பூட்டப்பட்டிருந்ததாக தகவல். இதை அறிந்த நெட்டிசன்களும், உள்ளூர் மக்களும், குழந்தைகளுக்கு மனரீதியாக நீண்டகால பாதிப்பு ஏற்படுமோ என கவலை தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கன்வாடிகளில் உள்ள பாதுகாப்பு தரத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
சம்பவத்துக்கு காரணமான பணியாளர் சவிதா ஷிண்டே மற்றும் உதவியாளர் ஷில்பா சாகரே, கிராம பஞ்சாயத்தின் முக்கிய கூட்டத்திற்குச் செல்ல வேண்டி குழந்தைகளை பூட்டிவிட்டு சென்றதாக கூறியுள்ளனர். முன்னாள் சர்பஞ்ச் அழைத்த கூட்டம் காரணம் என விளக்கம் அளித்தாலும், கண்காணிப்பின்றி சிறார்களை விடுவது கடும் பொறுப்பின்மையென பெற்றோர்கள் ஆவேசம் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
