நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளிக்கும் 20 மீனவர்கள்... பத்திரமாக மீட்க வலியுறுத்தல்!

 
அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!
 

தூத்துக்குடியில் 2 படகுகள் பழுதாகி நடுக்கடலில் தத்தளிக்கும் 20 மீனவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர், சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மீனவ கிராமத்திலிருந்து கடந்த ஜூன் 15ஆம் தேதி அதிர்ஷ்டராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இயந்திரம் பழுதாகி விசைப்படகு நின்றதைத் தொடர்ந்து, மீனவர்கள் தருவைக்குளம் மீனவர் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

இதையடுத்து, தூத்துக்குடியைச் சேர்ந்த அன்டோ என்பவரது விசைப்படகில் 9 மீனவர்கள் சென்று நடுக்கடலில் பழுதாகி தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீட்பு பணியில் ஈடுபட்ட படகும் பழுதானது. இதனால், இரு படகுகளைச் சேர்ந்த 20 மீனவர்களும் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. பழுதான இரு படகுகளும் காற்றின் வேகம் காரணமாக இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரத் தொடங்கி உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இரு பகுதிகளின் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் மீனவர்கள் தகவல் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தகவல் தெரிவித்து, கடலோர காவல் படையினர் மூலம் இரண்டு விசைப்படகுகள் மற்றும் 20 மீனவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மீன்வளம், மீனவர் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆகியோர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடல் படகு மீனவர்கள் மீன்

இதனை தொடர்ந்து அவர்களது உத்தரவின்படி மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மேலும் 2 விசைப் படகுகளில் சக மீனவர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் நேற்று காலை 11 மணி அளவில் புறப்பட்டு சென்றனர். இவர்கள் அந்த விசைப்படகுகளுடன் மீனவர்களை மீட்டு குழுவினர் இரவு கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தருவைகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது