அதிகாலையில் அதிர்ச்சி... திடீர் தீவிபத்தில் 20 குடிசைகள் கருகி சாம்பல்!

 
தீ
 


விருதுநகர் மாவட்டத்தில் மேலத்தெரு பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த குடியிருப்பில் அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

தீவிபத்து

ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியதில்   குடியிருப்புகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.  அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வண்டிகள் மூலம் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. 

தீவிபத்து

இருப்பினும் குடியிருப்புகளில் உள்ளே எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.  அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்த வீடுகளில் தீ பரவியது தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web