தொடரும் பயங்கரம்... விழா கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு 12பேர் பலி.... 20 பேர் படுகாயம்!

 
மெக்சிகோ
 

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மெக்சிகோவில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் இராபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில்  அவர்கள் தெருவில் குடித்து விட்டு, நடனம் ஆடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர்.  துப்பாக்கி சூடு நடத்துவது தெரிந்ததும், சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

அமெரிக்கா

இராபுவாடோ நகர அதிகாரி ரொடால்போ மெஜ் செர்வான்டிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது குறித்த  விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.  மே மாதம் குவானாஜுவாட்டோ மாகாணத்தின் சான் பர்தோலோ டி பெர்ரியாஸ் நகரில் சர்ச் சார்பில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்  7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது