20 ஓவர்... இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா இறுதி போட்டி...!

 
இந்தியா
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக், தர்மசாலா போட்டிகளில் இந்தியா வென்ற நிலையில், சண்டிகாரில் தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. லக்னோ போட்டி பனிமூட்டத்தால் ரத்து ஆனதால், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், தொடரின் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆண்டின் கடைசி சர்வதேச போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் முடிக்க தீவிரம் காட்டுகின்றன. இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் உள்ளனர்.

ஆனால் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ரசிகர்களை கவலைப்படுத்துகிறது. கடந்த 21 இன்னிங்சாக அரைசதம் இல்லாமல் தடுமாறி வருகிறார். கால் விரல் காயம் காரணமாக சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாக இருப்பதால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!